உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பின் ஓய்வுபெறும் மெஸ்ஸி?

0
7

2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு, சர்வதேசப் போட்டிகளில் இருந்து அர்ஜெண்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி ஓய்வுப் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஸ்ஸி வெளியிட்ட ஒரு உருக்கமானப் பதிவே இந்த யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அர்ஜென்டினா அணியினருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த மெஸ்ஸி, இத்தனை ஆண்டுகளில் மிக அழகான விஷயம் கோப்பைகள் மட்டுமல்ல, நாம் ஒன்றாக பயணித்த இந்த பயணம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

குழுவினருடன் அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வது, ஒன்றாக களம் காண்பது, கடினமான தருணங்களில் மீண்டும் எழுவது மற்றும் ஒவ்வொரு அடியையும் ரசித்து வாழ்வது.

மேலும், இறுதிப் போட்டியில் என்ன நடந்தாலும் இந்த அணி யாராலும் மறக்க முடியாத, அழிக்க முடியாத ஒரு வரலாற்றை எழுதிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here