வாருங்கள் அவிசாவளைக்கு சாமியுடன் மீண்டும் நடப்போம்

பூர்ணிமாவை முன்னிட்டு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட “சாய் நடை” நிகழ்வு, இவ்வாண்டு தனது 2ஆம் ஆண்டினை நிறைவு செய்யும் மகிழ்ச்சிமிக்க கட்டத்தை எட்டியுள்ளது. அவிசாவளையில் ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை, சாயி பாபாவுடன் ஆன்மீக, உள, உடல் நலம் தரும் 3 கிலோ மீட்டர் தூர நடைபயணம் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ளது.

அவிசாவளை, குடாகம வீதி, ஸ்ரீ முத்துமாரியம்மன் இந்து ஆலயத்திலிருந்து காலை 9 மணிக்கு நடைபயணம் ஆரம்பமாகி, எல்ஸ்டன் எஸ்டேட், ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆசிரமத்தில் நிறைவு பெறும். 12 மணிக்கு ஆரத்தி செய்யப்பட்டு, 12.30 மணியளவில் அன்னதானமும் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு சிறு தொடக்கமாக ஆரம்பித்த இந்த பக்தி நடை பயணம், இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் இந்த பக்தர்கள் கூட்டம், ஒற்றுமையின் சின்னமாகவும், நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது.

இந்த புனித நடைபயணம், வெறும் ஒரு ஆன்மீக பயணமாக மட்டும் இல்லாமல், நம் அனைவரையும் ஒன்றிணைத்து பிரார்த்தனை செய்யும் ஒரு தருணமாகவும் அமைகிறது. நமது தாய்நாடான இலங்கை அமைதியுடனும் செழிப்புடனும் முன்னேற வேண்டும் என்றும், இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் நலமுடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்றும் நாம் இந்த நடைபயணத்தின் மூலம் பிரார்த்திக்கிறோம். அத்துடன், இன்று போர் சூழலில் தவிக்கும் உலகில், அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும், மனித குலம் அன்பிலும் புரிந்துணர்விலும் ஒன்றிணைய வேண்டும் என்றும் சாயியின் திருவடிகளில் நமது வேண்டுதலை சமர்ப்பிக்கிறோம்.

அனைத்து பக்தர்களும், குடும்பத்தினரும், நண்பர்களும் இந்த இரண்டாம் ஆண்டு நடைபயணத்தில் இணைந்து சாயியின் அருளைப் பெற்று, நம் தாய்நாடான இலங்கையின் நல்வாழ்விற்காகவும், உலக சமாதானத்திற்காகவும் ஒன்றிணைந்து பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
விபரங்களுக்கும் பங்களிப்புகளுக்கும் தொடர்பு கொள்ள: +94 77 395 0009 (WhatsApp)
ganesh@eswaran.com | www.shiridisailanka.org
ஸ்ரீ சீரடி சாய் பாபா டிரஸ்ட், இலங்கை

