இலங்கை அணிக்கு பலத்த பின்னடைவு!

0
1

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு அடுத்தடுத்து இரு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆகியோர் காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து முற்றாக விலகியுள்ளனர்.

நீண்ட நாட்களாக மணிக்கட்டு காயத்தால் அவதிப்பட்டு வந்த 27 வயதான பெதும் நிஸ்ஸங்க, அதற்கான அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.

இதன் காரணமாக அவர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து மாத்திரமன்றி, 2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரிலிருந்தும் தனது பெயரை வாபஸ் பெற்றுள்ளார்.

முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 2 மற்றும் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஆட்டமிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here