இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகின்றது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 56,422 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 35 மரணங்களும் பதிவாகியுள்ளன என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் (55.47%) கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும், தென் மாகாணத்தில் 15% வீதமானோரும், சபரகமுவ மாகாணத்தில் 8.6% வீதமானோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

