கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க – இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின்இறுதி ஊர்வலம், அவர் ஈரானில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் ஈராக் ஊடாக கொண்டு செல்லப்படும் என ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊடகங்களால் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள தெஹ்ரான் மேயர் அலிரேசா ஜகானி, கமேனிக்கான விடைபெறும் நிகழ்வுகளும் இறுதிச் சடங்குகளும் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறும் எனத் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் “2026 ஜூலை 8ஆம் திகதி இறுதி ஊர்வல நிகழ்வுகள் ஈராக்கில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, இறைவனின் விருப்பப்படி 2026 ஜூலை 9ஆம் திகதி கமேனி அடக்கம் செய்யப்படவுள்ள ஈரானின் மஷாத் நகரில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்” என தெஹ்ரான் மேயர் அலிரேசா ஜகானி விவரித்துள்ளார்.

