ஈரான் உடன்படிக்கையில் கையெழுத்திட விரும்புகிறது – ட்ரம்ப்

0
2

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை மிகவும் வலுவான ஒன்று என்றும், ஈரான் இதில் கையெழுத்திட விரும்புகிறது எனத் தான் நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னர் குறிப்பிட்டபடி, இந்த உடன்படிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகும் என்பதில் எந்தளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நீண்ட விளக்கமளித்து அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

உடன்படிக்கைகளைப் பொறுத்தமட்டில் எதனையும் உறுதியாகக் கூற முடியாது.

ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.

இந்த உடன்படிக்கை நிறைவடையும் என்றே நான் நினைக்கிறேன்.

அவர்கள் இதில் கையெழுத்திட விரும்புகிறார்கள், அத்துடன் ஒரு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பவும் அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த உடன்படிக்கை என்பது வெறும் இரண்டு பத்திகளைக் கொண்டது அல்ல.

இது ஒரு வழக்கமான ஒப்பந்தமாக மாறக்கூடிய, மிக நீண்ட மற்றும் விரிவானதொரு புரிந்துணர்வு உடன்படிக்கையாகும்.

அவர்கள் இதில் கையெழுத்திடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

ஒருவேளை அவர்கள் கையெழுத்திடாவிட்டாலும் பரவாயில்லை, நாம் மீண்டும் இந்த செயல்முறையை ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here