ஈரானிய துறைமுகங்கள் மீதான தங்களது தடைகளை மீறியதாகக் கூறி, கடந்த வாரம் எரிபொருள் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தவிர, கடந்த வாரம் வளைகுடா பகுதியில் இந்திய மாலுமிகளைக் கொண்ட மேலும் இரண்டு கப்பல்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான இருதரப்பு சந்திப்பிற்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது கவலையையும் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, கடல்சார் போக்குவரத்தின் சுதந்திரத்தை (Freedom of Navigation) உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தியுள்ளேன்.
உலகளாவிய கப்பல் போக்குவரத்து பாதைகளைத் தொடர்ந்து இயங்க வைக்கும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு என்பது நமக்கு மிக மிக முக்கியமானது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாலுமிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிலளிக்கையில், “நான் அதைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.
அதுவொரு கடினமான தொழில், நாம் அந்த மக்கள் அனைவரையும் நேசிக்கிறோம், அவர்கள் சிறந்த மனிதர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

