16 ஆண்டுகள் கழித்து இணையும் SMS வெற்றிக் கூட்டணி

0
2

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜீவாவின் 47ஆவது திரைப்படமாக உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் First Look குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கிய வெற்றிப்படமாக அமைந்த ‘சிவா மனசுல சக்தி’ (SMS) திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராஜேஷ், 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தத் திரைப்படத்தின் மூலம் ஜீவாவுடன் இணைந்துள்ளார்.

இதனால் இந்த வெற்றிக் கூட்டணி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் First Look போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று நடிகர் ஜீவா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், ‘பரிதாபங்கள்’ சுதாகர் உள்ளிட்ட பலரும் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

தற்போது திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை வெளியாகவுள்ள First Look போஸ்டரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here