டி20 கிரிக்கெட்டின் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த 4 வீரர்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவின் இஷான் கிஷன் 2வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி முதல் இடத்துக்கு முன்னேறினார். அவர் 876 புள்ளிகள் பெற்றார்.
தொடர்ந்து முதலிடத்தில் இருந்த அபிஷேக் சர்மா 869 புள்ளிகளுடன் ஒரு இடம் சரிந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பாகிஸ்தானின் சாஹிப்சதா பர்ஹான் 848 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்துள்ளார். பில் சால்ட் 792 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
இலங்கையின் பதும் நிசாங்கா 5-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் திலக் வர்மா 6-வது இடம் பிடித்துள்ளார்.

