இத்தாலியில் எட்னா எரிமலை வெடிப்பு : பெருக்கெடுத்து ஓடும் எரிமலைக் குழம்பு

0
1

இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற எட்னா எரிமலை அண்மையில் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, அங்கிருந்து ஓரஞ்சு நிறத்தில் எரிமலைக் குழம்பு பெருக்கெடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 3,000 மீட்டர் உயரத்தில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மலையின் உச்சியிலிருந்து உருகிய பாறைகளும் லாவா குழம்பும் தகிக்கும் ஓரஞ்சு நிறத்தில் நதிபோல வழிந்தோடி வருகின்றன.

உள்ளூர் எரிமலை கண்காணிப்பு மையத்தின் தகவல்படி, திங்கட்கிழமை நிலவரப்படி இந்த எரிமலைக் குழம்பு 2,700 மீட்டர் உயரம் கொண்ட பகுதி வரை கீழ்நோக்கி இறங்கியுள்ளது.

இந்த இயற்கை நிகழ்வு அப்பகுதியில் ஒரு பிரம்மாண்டமான காட்சிப் பொலிவை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here