ஜனாதிபதியை சந்தித்த ICC தலைவர்

0
15
Oplus_16908288
  • சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவின் பிரச்சினையே முதன்மையாக கலந்துரையாடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளுக்கு முரணானது என கருதப்படும் சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு நியமனம் குறித்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடுவார் என இந்திய ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை நடத்துவதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here