இலங்கை அணி அபார வெற்றி!

0
7

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு A ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 6 ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 322 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக Avishka Fernando 110 ஓட்டங்களையும், Niroshan Dickwella 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Faridoon Dawoodzai 4 விக்கெட்டுகளையும், Farmanullah 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 323 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்நிலையில் இலங்கை அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here