மகுடம் திரைப்படத்தின் புதிய அறிவிப்பு!

0
10

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பின்னர் படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷாலே ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த தீபாவளி அன்று வெளியிட்ட அவர், படத்தின் போஸ்டரில் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தொடர்ந்து 17 இரவுகள் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், அந்த மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.

சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது படத்தின் ‘ரைஸ் ஆஃப் லிங்கா’ எனும் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘மகுடம்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here