ஹோமாகம பேருந்து பணிமனை (Bus Depot) வளாகத்திற்குள் டெங்கு ஒழிப்பு பிரிவினரால் கொசுக்கள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த பணிமனைக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்துடன் இணைந்த பிடிபன பொதுச் சுகாதார பரிசோதகரால் (PHI) தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஹோமாகம நீதவான் ரஜிந்திர ஜயசூரிய இந்த அபராதத்தை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இப்பணிமனை வளாகத்தை சுத்தப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளால் இதற்கு முன்னர் நான்கு முறை தனித்தனியாக ‘சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள்’ (Red Notices) விடுக்கப்பட்டிருந்த போதிலும், நிர்வாகம் அதனை அலட்சியப்படுத்திய நிலையிலேயே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

