ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC World Test Championship) தொடரின் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் கீழ், இந்திய அணி இலங்கையில் விளையாடும் முதலாவது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி:
முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை SSC மைதானத்தில் நடைபெறும்.
இரு போட்டிகளும் தினமும் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தத் தொடர் இரு அணிகளுக்குமே மிகவும் தீர்க்கமான ஒன்றாக அமையவுள்ளது.
ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள இந்த விறுவிறுப்பான ஆட்டத்தைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
