பங்களாதேஷ் – தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காக்ஸ் பஜார் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(06.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ஏற்பட்ட இராணுவ ஒடுக்குமுறை காரணமாக தப்பியோடி, உலகின் மிகப் பெரிய அகதிகள் குடியேற்றமான காக்ஸ் பஜாரில், 12 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் வசித்து வருகின்றனர்.

