தென்மேற்கு பிரான்சில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், ஸ்பெயின் எல்லைக்கு அருகிலுள்ள சுமார் 24 கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்றையதினம்(6.7.2026)வீசி வரும் பலத்த காற்று, தீயின் வேகத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரான்சின் பெர்பிக்னான் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்களுக்கு உதவ, சைப்ரஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து நான்கு நீர்வீச்சு விமானங்களை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது.

