“ராதா புகாரில் உண்மையில்லை” – ரூ. 46 கோடி மோசடி குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா மறுப்பு!

0
9

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையான ராதா, தனது அக்காவும் பிரபல நடிகையுமான அம்பிகா மற்றும் தனது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்

தான் கையெழுத்திட்டு வைத்திருந்த காசோலைகளை தனது அனுமதியின்றி எடுத்து, அதில் தொகையை நிரப்பி சுமார் 46 கோடி ரூபாய் வரை மோசடி செய்ய நடிகை அம்பிகா முயன்றதாகவும், இதற்கு அவர்களின் தம்பி உடந்தையாக இருந்ததாகவும் ராதா குற்றம் சாட்டியிருந்தார்

கடந்த ஒன்றரை ஆண்டாகத் தனது குடும்பச் சொத்துகளுக்குள் தன்னை நுழையவிடாமல் அம்பிகாவும் அவரது சகோதரரும் தடுத்து வருவதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகை ராதாவின் இந்த பகிரங்கக் குற்றச்சாட்டுகள் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை அம்பிகா அந்தப் புகாரில் எந்தவொரு உண்மையும் இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்

தங்களுடைய குடும்பத்திற்குச் சொந்தமான நிலம், தொழில் மற்றும் தங்கம் தொடர்பான குடும்பச் சொத்துகளில் நீண்ட நாட்களாகப் பிரச்னைகள் நிலவி வந்தன.

அவற்றைச் சுமூகமாகத் தீர்ப்பதற்காகக் கடந்த ஜூலை மாதமே அம்பிகா காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது

காசோலைகள் வழங்கப்பட்டது ஏன்? நிலுவையில் உள்ள அந்த வழக்கு மற்றும் குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக, நடிகை ராதாவே தன் விருப்பத்தின் பேரில் முன்வந்து அந்த 5 காசோலைகளை தனக்கு வழங்கியதாக அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.

சொத்துத் தகராறு மற்றும் காசோலை விவகாரம் தொடர்பாக இரு பிரபல சகோதரிகளுக்கு இடையே எழுந்துள்ள இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here