‘நந்தன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் இரா. சரவணன் தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.
இப்படத்தை ‘இரா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்
வெளியான டைட்டில் போஸ்டர் மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
முழுவதும் கருப்பு-வெள்ளை பின்னணியில், ஒரு சிறுமி கையில் ஏந்தியிருக்கும் உலோகப் பாத்திரத்தின் பிரதிபலிப்பில் கேமராக்களுடன் செய்தியாளர்களும் படக்குழுவினரும் இடம்பெற்றுள்ளனர்.
அந்தப் பிரதிபலிப்பின் மையத்தில் சிவப்பு நிறத்தில் ‘நந்தன் 2’ என்ற தலைப்பு இடம்பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
‘நந்தன்’ படத்தில் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், ‘நந்தன் 2’ படத்திலும் சமூக அக்கறை கொண்ட மற்றொரு முக்கியமான பிரச்சனையை மையமாக வைத்து, முதல் படத்தை விட இன்னும் அழுத்தமான படைப்பாக இதனை உருவாக்கி வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள அதேவேளையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

