ரஷ்யாவின் கொடூர தாக்குதல்! -கிவ் அருகே சிறுவன் உட்பட மூவர் பலி!

0
4

யுக்ரைன் தலைநகர் கிவ் அருகே ரஷ்யா மேற்கொண்ட இரவுநேரத் தாக்குதல்களில் சிறுவன் ஒருவன் உட்பட குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை அதிகாலையில் தலைநகருக்கு கிழக்கே ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் திமுர் தகாச்சென்கோ தெரிவித்துள்ளார்.

வீழ்ந்த இடிபாடுகள் காரணமாக குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மற்றொரு கட்டடத்தில் தீப்பரவலும் ஏற்பட்டுள்ளது.

கிவ்வில் உள்ள கட்டடம் ஒன்றிலும் எரிபொருள் தாங்கி ஒன்றிலும் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக மேயர் விட்டாலி க்ளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தனது முதலாவது விஜயமாக செர்பிய தலைநகர் பெல்கிரேடை சென்றடைந்துள்ளார்.

அங்கு அவர் செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச்சைச் சந்தித்து பொருளாதார உறவுகள், பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here