டொலருக்கு எதிராக சரிந்த இலங்கை ரூபாய்!

0
10

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026-ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, சராசரி பிரதான கடன் வழங்கள் வட்டி வீதம் (AWPLR) 10.95 சதவீதமாக உயர்வடைந்துள்ளதுடன், உள்நாட்டுப் பணச் சந்தையின் மேலதிக திரவத்தன்மை 318.13 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 0.47 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 21,315.91 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம், திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணைமுறிகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் 3.98 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.

சர்வதேச சந்தையில், ஈரான் – ஓமான் பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட முன்னேற்றம் காரணமாக, பிரெண்ட் மற்றும் டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் விலைகள் பேரல் ஒன்றுக்கு முறையே 4.50 டொலர் மற்றும் 3.59 டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here