பாலஸ்தீன ஆதரவு அமைப்பான பாலஸ்தீன எக்சன் அமைப்பை அமெரிக்கா ‘பயங்கரவாத இயக்கம்’ என அறிவித்துள்ளதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான கேஜ் இன்டர்நேஷனல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக, சட்டப்பூர்வமாகப் போராடுபவர்களை ஒடுக்குவதற்காகவே “பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை” என்ற வார்த்தையை வொஷிங்டன் கேடயமாகப் பயன்படுத்துவதாக அந்த அமைப்பு சாடியுள்ளது.
2025-இல் பிரித்தானியாவும், தற்போது அமெரிக்காவும் இந்த அமைப்பைத் தடை செய்துள்ள நிலையில், இனப்படுகொலைக்கான ஆயுத விநியோகத்தைத் தடுப்பதே ‘பயங்கரவாதம்’ என்ற வரையறைக்குள் கொண்டுவரப்படுவதாக கேஜ் இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பாலஸ்தீன மக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் போராடுவதற்கான அனைத்து நியாயமான வழிகளையும் இந்தத் தடை முடக்கியுள்ளதாக அச்சபை கவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இனப்படுகொலை புரியும் ஒரு நாட்டினைப் பாதுகாப்பதற்காகவே, பல ஆண்டுகளாகப் போராடிப் பெறப்பட்ட மனித உரிமைகளை அமெரிக்காவும் பிரித்தானியாவும் சீர்குலைப்பதாக கேஜ் அமைப்பின் பிரதிநிதி அனாஸ் முஸ்தபா குற்றம் சாட்டியுள்ளார்.

