தினமும் 100 உயிர்கள் பறிபோகின்றன – இலங்கையை உலுக்கும் அதிர்ச்சித் தகவல்!

0
7

இலங்கையில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு காரணமாக தினமும் 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

தேசிய “ரடம ஏகடட” (Rataama Ekatata) விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் கல்வி தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் போதைப்பொருள் சார்ந்த உயிரிழப்புகளுக்குப் புகையிலைப் பயன்பாடே முதன்மை காரணியாக விளங்குவதாகவும், மதுபான நுகர்வு காரணமாக தினமும் 10 முதல் 15 உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சட்டவிரோத போதைப்பொருட்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புகையிலை மற்றும் மதுபானமே பெரும்பாலும் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் நுழைவுப் புள்ளியாக அமைவதாகவும் எச்சரித்தார்.

புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகள் இணைந்து, நாட்டில் நாளொன்றுக்கு 80 முதல் 100 உயிர்களைப் பறிப்பதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here