காசா மீது மீண்டும் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்! குழந்தைகளுடன் பலர் படுகாயம்!

0
5

காசாவின் நுஸைரத் (Nuseirat) அகதிகள் முகாம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மீண்டும் நடத்திய கொடூரமான வெடிகுண்டுத் தாக்குதலின் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன!

மத்திய காசாவில் உள்ள நுஸைரத் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியின் மத்திய சந்தை முழுவதும் அடர்ந்த தூசி மண்டலமாக மாறியது.

வட காசாவில் உள்ள குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 7 பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காசா நகரத்தின் தெற்கே அல்-ரஷீத் (al-Rashid) வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது இஸ்ரேலிய ட்ரோன் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்; அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அக்டோபர் 2023 முதல் தொடரும் இந்த கொடூரப் போரில், இதுவரை 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,74,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here