இஸ்ரேலின் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துங்கள்!” – நோர்வே அகதிகள் சபை அவசர கோரிக்கை!

0
10

தெற்கு லெபனானில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்திற்கு இடையே, இஸ்ரேலின் குண்டுவீச்சுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என நோர்வே அகதிகள் சபை (NRC) கடுமையான கோரிக்கை விடுத்துள்ளது!

அனைத்து தரப்பினரும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என நோர்வே அகதிகள் சபை வலியுறுத்தியுள்ளது.

மக்களின் அவல நிலை: “பல மாதங்களாக தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் தெற்கு லெபனான் மக்களுக்கு, மீண்டும் சொந்த வீடுகளுக்குத் திரும்புவது என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அவர்கள் எங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற அச்சத்திலேயே வாழ வேண்டியுள்ளது” என லெபனானுக்கான அதன் இயக்குனர் மவ்ரீன் பிலிப்பொன் (Maureen Philippon) கவலை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-லெபனான் எல்லை ஒப்பந்தங்கள் குறித்து பேசிய அவர், தாக்குதல்கள் குறைவதை வைத்து மட்டும் ராஜதந்திர ஒப்பந்தங்களின் வெற்றியை அளவிட முடியாது.

குடும்பங்கள் அச்சமின்றி தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்புவதற்கான உண்மையான பாதுகாப்பை அந்த ஒப்பந்தங்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here