அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’- ஈரான் மீது புதிய தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கை!

0
6

ஈரானுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது!

அமெரிக்கா தனது ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ திட்டத்தின் கீழ், விமானப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள குறைந்தது 27 நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச அமைப்புகள் மீது கடுமையான தடைகளை விதித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் ஈரான் தங்களது படைகளையும் ஆயுதங்களையும் ரகசியமாக நகர்த்துவதற்குப் பாதுகாப்பாகச் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

குறைந்த அளவிலான மோதல்களாகத் தோன்றினாலும், அமெரிக்க ராணுவம் அப்பகுதியை விட்டு வெளியேறவில்லை என்பதை தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

டொனால்ட் டிரம்ப் விரும்பினால், ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அமெரிக்காவிடம் வலுவாக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here