மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

0
10

வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

அந்தமான் தீவுகளுக்கு வடக்கே வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலக் கலக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக்கூடும் என திணைக்களம் தெரிவித்துளது.

இதன் காரணமாக, நாளை (19) முதல் அடுத்த சில நாட்களுக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here