முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஆற்றிய உரை, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்குக் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெற்ற பேரணியில் விமல் வீரவன்ச பேசிய பேச்சுக்கள் தொடர்பிலேயே லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்பான எயார்பஸ் வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, விமல் வீரவன்சவின் உரை அடங்கிய சிடியை (CD) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கருத்துரைகளை ஆராய்ந்த பிரதான நீதவான், இந்த உரை நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படுகிறதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

