அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு புதிய சட்டம்!

0
10

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் (Seat belt) அணிவது இன்று (18) நள்ளிரவு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

சாரதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு வருட சலுகைக் காலம் இன்றுடன் நிறைவடைவதாக வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை (19) முதல் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், சீட் பெல்ட் வசதி இல்லாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது.

முன் இருக்கை மற்றும் பின் இருக்கைப் பயணிகள் அனைவருக்கும் இந்த விதிமுறை பொருந்தும் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், அபராதம் விதிப்பதை விட மக்களின் உயிரைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என வலியுறுத்தியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here