சவூதி அரேபியாவுக்கு ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடும் எச்சரிக்கை – மூன்று முக்கிய நிபந்தனைகள் அறிவிப்பு!

0
3

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர் அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, சவூதி அரேபியாவிற்கு எதிராக மூன்று முக்கிய “சமன்பாடுகளை” (Equations) விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தடையடைப்பிற்குப் பதிலாக தடையடைப்பு, சவூதியின் இராணுவக் குவிப்புகள் மீது தாக்குதல் மற்றும் யேமனின் இறையாண்மையைப் பாதுகாத்தல் ஆகியவையே அவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 20 முதல் சவூதி கடல்சார் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து, சவூதியின் 8 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

செங்கடல், அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியே பயணிக்க முயன்ற சவூதியின் 48 எண்ணெய் கப்பல்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

யான்பு, நஜ்ரான், ஜிசான், அப்ஹா உள்ளிட்ட சவூதியின் முக்கிய பகுதிகள் மற்றும் எண்ணெய் விநியோக மையங்களைக் இலக்கு வைத்து 9 இராணுவ நடவடிக்கைகளும், சவூதி இராணுவக் குவிப்புகளுக்கு எதிராக 14 தாக்குதல் நடவடிக்கைகளும் நடத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் “முழுமையான தாக்குதலுக்கு முழுமையான பதிலடி கொடுக்கப்படும்” என சவூதியை எச்சரித்துள்ள சவூதி, முற்றுகையைத் திரும்பப் பெறுவது, வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுவது மற்றும் யேமனின் வளங்களை அந்நாட்டு மக்களிடமே ஒப்படைப்பதே சவூதிக்கு உள்ள ஒரே வழி என்றும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here