‘மண்டாடி’ திரைப்படத்தைப் பாராட்டி நடிகர் சரத்குமார்

0
9

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘மண்டாடி’. இப்படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாது, திரையுலகினர் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. அந்த வரிசையில், நடிகர் சரத்குமார் இப்படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான பாராட்டுக்களைப் பகிர்ந்துள்ளார்.

“‘மண்டாடி’ படத்தைப் பார்த்த பிறகு எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இது இந்தியத் திரையுலகில் இதுவரை யாரும் முயற்சிக்காத ஒரு துணிச்சலான படைப்பு.

கடலிலேயே முழுமையாகப் படமாக்கப்பட்ட இப்படம், பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளையும், அந்தச் சூழலில் படக்குழுவினர் காட்டிய துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது.

எளிமையான பாய்மரப் படகுப் பந்தயமாகத் தொடங்கி, மனித விழுமியங்கள், அன்பு மற்றும் தியாகம் என உணர்வுப்பூர்வமான பல பரிமாணங்களை இந்தப் படம் உள்ளடக்கியுள்ளது.” என தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here