நடிகர் விமல் மற்றும் ஸ்ரேயா சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’ திரைப்படம், நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்புக்குப் பிறகு, ‘சண்டக்காரி’ திரைப்படம் செப்டம்பர் 18-ம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாளப் படமான இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் வெளியான ‘பிஸ்னஸ்மேன்’ படத்தின் தழுவலாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை இயக்குநர் ஆர். மாதேஷ் இயக்கியுள்ளார்.
மென்பொருள் (IT) நிறுவனத்தில் பணிபுரியும் கண்டிப்பான பெண் அதிகாரிக்கும் (ஸ்ரேயா), அவருக்குக் கீழ் வேலை செய்யும் விமலுக்கும் இடையே ஏற்படும் காதல், மோதல்கள் மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

