நெடுந்தீவை நோக்கி சென்ற படகு மாயம்

0
4

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு சென்ற படகு ஒன்றில் 10 பேர் காணமல் போயுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு பயணித்த படகு ஒன்றே உரிய நேரத்தில் நெடுந்தீவை வந்தடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான படகில் 10 பேர் பயணித்துள்ள நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

அந்த பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பதாக காணப்படுவதாகவும், தேடுதல் பணிகளுக்கு சிரமமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் குறித்த படகை மீட்கும் பணிகளை கடற்படை ஆரம்பித்துள்ளதாக கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here