நுவரெலியா மோட்டார் பந்தயத்தில் விபத்து

0
3

நுவரெலியா பிலக்பூல் மற்றும் மாஹஸ்தோட்ட இடையே நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டியின் போது, இரண்டு மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள் விபத்துக்குள்ளாகிப் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பந்தயப் போட்டி நுவரெலியா மாநகர சபையும் கொழும்பிலுள்ள தனியார் சங்கம் ஒன்றும் இணைந்து இன்றும் நாளையும் நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நானுஓயா பிலக்பூல் பாலத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு, மலைச்சரிவுகள் மற்றும் வளைவுகள் நிறைந்த தேயிலைத்தோட்டங்கள் வழியாக மாஹஸ்தோட்டை ஊடாக நேரம் கணக்கிடப்படும் போட்டியாக இது நடத்தப்படுகிறது.

இன்று (16) நடைபெற்ற போட்டியில் பெருமளவிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டதுடன், நுவரெலியா பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வீதியை விட்டு விலகித் தேயிலைத்தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here