டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,000-ஐக் கடந்தது

0
2

இலங்கையில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 92,000-த்தை கடந்துள்ளதுடன், இதுவரையில் 92,011 டெங்கு தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு தடுப்புப் பிரிவு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு தடுப்புப் பிரிவின் பிரதானியின் கூற்றுப்படி, ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 6,671 டெங்கு நோயாளர்கள் புதிதாக பதிவாகியுள்ளனர்.

மேலும், டெங்கு நோய்த்தொற்று காரணமாக, இதுவரை மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாகப் பேணிப் பாதுகாத்து, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெறுமாறு சுகாதாரத் துறையினர் தொடர்ந்தும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here