நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனுக்கு இன்று இறுதிச் சடங்கு

0
4

செங்கல்ஓய வெலிதுடுவ மண்கட பகுதி பாடசாலை மாணவன் சாமிக இம்மாதம் 19ஆம் திகதி நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து சடலம் நேற்று இரவு வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டதுடன், இறுதிச் சடங்குகள் இன்று (21) ஆரச்சிகட்டுவ பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

மேலும்,ஆரச்சிகட்டுவ, வைரன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 13 வயது எஸ்.ஜே.எம்.லகிந்து சாமிக என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன்,இவர் ஹெலம்பவட்டவன மகா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவனாவார்.

இந்நிலையில்,தனது பாடசாலை நண்பனுடன் காலணி ஒன்று வாங்குவதற்காக ஆரச்சிகட்டுவ நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்படட்ட அவர் நண்பனுடன் செங்கல்ஓய வெலிதுடுவ மண்கட பகுதியில் நீராடிக் கொண்டிருந்த போது, செங்கல்ஓயாவின் ஆழமான பகுதியில் விழுந்து இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here