அமெரிக்கா – ஈரான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நேரடிப் பேச்சுவார்த்தை சுவிஸில் ஆரம்பம்!

0
6

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இரு நாட்டு உயர் அதிகாரிகளும் சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நேரடிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.

அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுதல், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஆகிய விடயங்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸ், ஜாரெட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் வெளிவிவகார அமைச்சரும் கலந்துகொண்டுள்ளனர்.

இப்போர் முழுவதும் மத்தியஸ்தராகச் செயற்பட்ட பாகிஸ்தானின் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதியும் இப்பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளனர்.

ஈரானின் மறுசீரமைப்புக்காக 300 பில்லியன் டொலர் நிதி மற்றும் தடைகள் நீக்கம் போன்ற சாதகமான அம்சங்கள் இதில் இருந்தாலும், ஈரானின் அணுசக்தி விவகாரம் குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியுள்ளது.

இதற்கிடையில், இந்த ஒப்பந்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே பாரிய மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here