சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

0
5

ரூபா 60இ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயன்ற நபர் ஒருவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பமுனுகம, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய கூலித் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இன்று (08) அதிகாலை 04.00 மணியளவில் டுபாயில் இருந்து ‘ஃப்ளை டுபாய்’  சேவைக்குச் சொந்தமான FZ-569 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பைகளை பரிசோதித்த போதே, இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட “டாப் கன்”  வகையைச் சேர்ந்த 40,000 சிகரெட்டுகளைக் கொண்ட 200 சிகரெட் அட்டைப்பெட்டிகள்  அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர், எதிர்வரும் 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here