அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும் மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குப் திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’, ஆடிக் கார்த்திகை நன்னாளான 2026 ஆகஸ்ட் 6 ஆம் நாள் (வியாழக்கிழமை) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் கண்டது.

காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் வந்து தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, முருகப்பெருமானுக்காக எடுத்துவரப்பட்ட நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் சென்றது.

அந்த மங்கள நிகழ்வின் மூலம் ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ காண்பிய விரிப்புக் காண்டது.
இந்த நிகழ்வில் முருகனடியவர்கள் வடமாகாண ஆளுனர், யாழ் மாநகர முதல்வர் , யாழ் மாநகர ஆணையாளர், வடமாகாண பிரதி பிரதம செயலாளர், என பலர் கலந்துகொண்டனர்.




