வத்தளை துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

0
5

வத்தளை, கதிரான பகுதியில் பிறந்தநாள் விழா நிகழ்வொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய துப்பாக்கிதாரி உள்ளிட்ட மேலும் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 23 ஆம் திகதி இரவு, கதிரான பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள மண்டபமொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர் மீது, காரில் வந்த இனந்தெரியாத குழுவினரால் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின்  ஒத்துழைப்புடன் முன்னெடுத்த தீவிர விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் (07) இந்த சந்தேகநபர்கள் கைது செய“யப“பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நேரடித் துப்பாக்கிதாரி, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரைச் செலுத்திய சாரதி மற்றும் குற்றவாளிகள் தலைமறைவாக இருக்க புகலிடம் அளித்து உதவிய நபர் ஆகியோரே அடங்குவர். இவர்கள் ஜிந்துப்பிட்டி, மாத்தளை மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த 26, 35 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என்பவரைக் இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனினும் இலக்கு மாறியதால் அவருக்கு அருகில் நின்றிருந்த நபர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இக்கொலை வழக்குடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here