கொழும்பு காக்கைதீவில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிகழ்வு!

0
3

ஆடி அமாவாசையை முன்னிட்டு கொழும்பு, மட்டக்குளி காக்கைதீவு களனி சங்கமத்தில் மறைந்த முன்னோர்களுக்குப் பிதிர்க்கடன் செலுத்தும் சிறப்புச் சமய அனுஷ்டானங்கள் இன்று (ஆகஸ்ட் 12, 2026) பக்திப் பெருக்குடன் நடைபெற்றன.

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை திரளான இந்து பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் மறைந்த பித்ருக்களுக்குத் தர்பணம் செய்து வழிபாடுகளை நிறைவேற்றினர்.

காக்கைதீவு சங்கமப் பகுதியில் நீராடும் இடங்களின் ஆழம் சுமார் 20 அடி வரை காணப்படுவதாக இலங்கை கடற்படையினர் முன்னதாக ஆய்வு செய்து எச்சரித்திருந்தனர்.

இதன் காரணமாக அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பக்தர்கள் நேரடியாக ஆற்றில் இறங்கி நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அமைப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் கரையில் இருந்தவாறே வாளிகள் மூலம் நீரை அள்ளி ஊற்றி நீராடி, பாதுகாப்பான முறையில் தங்களது பிதிர்க்கடன்களைச் செலுத்தினார்கள்.

கடற்படையினர் மற்றும் அமைப்பாளர்களின் ஒத்துழைப்புடன் வழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் அமைதியான முறையிலும் சிறப்பாகவும் நிறைவு பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here