அளவுக்கு அதிகமான மாத்திரைகள் உட்கொண்ட மாணவி உயிரிழப்பு!

0
14

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10-ல் கல்வி கற்று வந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​பொகவந்தலாவ, மோரா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி, கடந்த 24 ஆம் திகதி தனது வீட்டில் இருந்த குளிசைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

​இதன் காரணமாக திடீரென மயக்கமடைந்த மாணவி, உடனடியாகப் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

​எனினும், வைத்தியர்களின் தீவிர முயற்சிகளையும் மீறி அம்மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

​இச்சம்பவம் குறித்து பொகவந்தலாவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here