ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10-ல் கல்வி கற்று வந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவ, மோரா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி, கடந்த 24 ஆம் திகதி தனது வீட்டில் இருந்த குளிசைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக திடீரென மயக்கமடைந்த மாணவி, உடனடியாகப் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும், வைத்தியர்களின் தீவிர முயற்சிகளையும் மீறி அம்மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொகவந்தலாவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

