தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில், கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடியாட்டம் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்பதற்கு அனுமதி வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தீர்மானித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (27) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
மேலும், நாளை (28) நடைபெறவுள்ள எசல பெரஹரா விழாவின் பாதுகாப்பிற்காக கூடுதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் (STF) பொலிஸாரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விசேட கலந்துரையாடலில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

