அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் (Burgenstock) நகரில் நடைபெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் அங்கு விரைந்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் கட்டார் நாடும் கலந்துகொள்ளவுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமிய குடியரசான ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அதனை முன்னோக்கி நகர்த்துவதற்கும் பாகிஸ்தான் தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

