பருவநிலை மாற்றத்தால் 242 மில்லியன் குழந்தைகளின் கல்வி பாதிப்பு

0
2

பருவநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாக யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது.

உலகளவில் சுமார் 1.8 பில்லியன் குழந்தைகள் வறட்சியினாலும், 1.2 பில்லியன் குழந்தைகள் கடுமையான வெப்ப அலையினாலும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

662 மில்லியன் குழந்தைகள் வெப்பமண்டல புயல்களாலும், 337 மில்லியன் குழந்தைகள் ஆற்று வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் மட்டும் 1 பில்லியன் குழந்தைகள் மலேரியா ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும், பருவநிலை விபரீதங்களால் 85 நாடுகளில் 242 மில்லியன் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய வானிலையை மாற்றி அமைக்கும் ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) தாக்கம் வரவிருக்கும் மாதங்களில் உணவு உற்பத்தியை அச்சுறுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here