எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.
ஒக்டோபர் 17 முதல் 23 வரை நடைபெறவுள்ள இந்த முக்கோண ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.
தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ஒக்டோபர் 9 முதல் 13 வரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20I தொடர் ஒக்டோபர் 27 ஆம் திகதியும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 5 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.
மூன்று உலகத் தரம் வாய்ந்த அணிகள் மோதும் இந்தத் தொடர், சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்குப் விருந்தாக அமையும் என ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே கிரிக்கெட் சபைகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

