நியூசிலாந்து மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய மார்க் சேப்மேன்!

0
8

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் மார்க் சேப்மேன் (Mark Chapman), எதிர்வரும் BBL தொடரில் விளையாடுவதற்காகக் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளார்.

2026-27 பருவகாலத்திற்கான நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் மத்திய ஒப்பந்தத்திற்குப் பதிலாக, சாதாரண ஒப்பந்தத்தை (Casual Contract) மார்க் சேப்மேன் தேர்வு செய்துள்ளார்.

எனினும், இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் தொடரில் இவர் விளையாடவுள்ளார்.

சேப்மேன் விலகிய இடத்திற்கு வடக்கு மாவட்ட வேகப்பந்து வீச்சாளர் மெத்யூ ஃபிஷர் (Matthew Fisher) முதன்முறையாக மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை தொடர்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்களின் பலம் தேவை என்பதால் ஃபிஷர் இணைக்கப்பட்டுள்ளதாகத் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

BBL தொடரில் பங்கேற்க ஏதுவாக ஒப்பந்தத்தை மாற்றினாலும், நியூசிலாந்து தேசிய அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாக மார்க் சேப்மேன் உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here