இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டதும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் செய்தது. இந்த இரண்டு தொடர்களும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு மோசமானதாகவே அமைந்தது.
அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என இழந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 0-4 என இழந்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் நாளை தொடங்குகிறது.
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் தோல்வி, ஜிம்பாப்வே தொடர் குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
இங்கிலாந்தில் நாங்கள் ஒரு கடினமான காலகட்டத்தைச் சந்தித்தோம். ஆனால், அதிலிருந்து பல சாதகமான விஷயங்களையும் கற்றுக்கொண்டோம். ஒரு அணியாக இனிவரும் காலங்களில் எதை உருவாக்க வேண்டும் என்பதையும், களத்தில் இறங்கிய பிறகு எத்தகைய மனத்தெளிவு, விழிப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறிச் செயல்படும் திறன் ஆகியவை தேவை என்பதையும் நாங்கள் புரிந்துகொண்டோம்.
எங்களில் சிலர் இங்கு (ஜிம்பாப்வே) அமுதல் முறையாக விளையாடுகிறோம். எனவே, எவ்வளவு விரைவாக நாம் சூழலுக்கு ஏற்ப மாறுகிறோமோ, அவ்வளவு சிறந்த முடிவுகளைப் பெறுவோம்.

