தமிழ் திரையுலகில் முன்னணி இசைக்கலைஞராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அவரே இயக்கி, நடித்த ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் கடந்த 2017 ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைத்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் விதமாக, படத்தின் இரண்டாம் பாகமான ‘மீசைய முறுக்கு 2’ எப்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பதை நாளை மாலை 5 மணிக்கு அறிவிப்போம் என்று ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
தன் திரைப்பயணத்தின் மிக முக்கிய மைல்கல்லான ‘மீசைய முறுக்கு’ படம் குறித்து ஆதியின் பதிவில், “இது வெறும் ஒரு கனவாகத் தொடங்கியது. ஆனால் இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது” என மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
2017 ஜூலை 21 அன்று வெளியான இப்படம், இளைஞர்களின் கனவுகள் மற்றும் நட்பைக் கொண்டாடியதால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று தெரிவித்திருந்தார்.
